Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை பிரியா ஆனந்த்! முக்கிய இருக்குனரின் படத்தில்

ஜெய் நடித்த வாமனன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். பின் சித்தார்த்துடன் 180, சிவகார்த்திகேயனுடன் எதிர் நீச்சல், சிவாவுடன் வணக்கம் சென்னை படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் அரிமா நம்பி, கௌதமுடன் முத்துராமலிங்கம், அசோக் செல்வனுடன் கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் நடித்திருந்தார். பின் ஆர்.ஜே பாலாஜியுடன் ஜோடியாக நடித்த எல்.கே.ஜி படம் இவருக்கு வெற்றியை அளித்தது.

பின்னர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்யா வர்மா படத்திலும் பிரியா நடித்திருந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களிலும் நடித்து வரும் இவர் தமிழில் சுமோ படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக கன்னடத்தில் சிவராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை ரவியரசு இயக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

loading...