Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு, கல்யாணி படத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு! முக்கிய சம்பவத்தின் பிரதிபலிப்பு

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனை தொடர்ந்து இப்படத்தில் சிம்வுக்கு ஜோடியாககிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, பாரதி ராஜா என பலர் நடிக்க சுரேஷ் காமாட்சி படத்தை தயாரிக்கிறார். சென்னை விஜிபி கடற்கரையும் முக்கிய காட்சிகள் ஷெட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் இந்தியன் 2 படப்படிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகினர். இந்நிலையில் மாநாடு படத்திற்காக தயாரிப்பாளர் ஹீரோ, ஹீரோயின், மற்ற நடிகர்கள், கேமரா மேன், இயக்குனர், உதவி இயக்குனர், தொழில் நுட்ப கலைஞர்கள் பலருக்கும் ரூ 30 கோடி உயிர் காப்பீடு செய்துள்ளாராம்.

இதற்காக அவர் ரூ 7.8 லட்சம் ஜி.எஸ்.டி வரி செலுத்தியுள்ளார்.