Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கிரேன் என் மீது விழுந்து இருக்கலாம், உருக்கமான கடிதத்தை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் கோரா சம்பவம் நேர்ந்தது.

ஆம் அங்கு இருந்து கிரேன் ஒன்று அறுந்து கீழே விழுந்து மது, சந்திரன், ஸ்ரீ கிருஷ்ணா என்ற மூன்று நண்பர்கள் உயிர் இழந்தனர்.

மேலும் இதற்காக அந்த உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ரூபாய் 1 கோடி உதவி தொகையாக வழங்கினார் கமல்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றைவெளியிட்டுள்ளார். இதில் "படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் எனது துணை இயக்குனரையும், உதவியாளர்களையும் இழந்துள்ளேன் .தூக்கமில்லா இரவுகளும் , அதிர்ச்சியையும் கொண்டுள்ளேன் ,கிரேன் என் மீது விழுந்திருக்கலாமே. உயிரிழந்த குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனை" என்று தெரிவித்துள்ளார்.