Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 விபத்து..ஷங்கரிடம் 2.5 மணி நேரம் விசாரனை! முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த பிரபலம்

கடந்த பிப்ரவரி 19ம் தேதி சென்னையில் EVP பிலிம் ஸ்டூடியோவில் நடிகர் கமல் நடித்துவந்த இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து பற்றி மத்திய குற்றபிரிவு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இயக்குனர் ஷங்கர் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் இரண்டரை மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த விபத்து ஏற்பட காரணமான இருந்த கிரேன் மற்றும் மற்ற உபகரணங்கள் பராமரிப்பது மற்றும் இயக்குவது என் பணி இல்லை, விபத்து நடந்தபோது நான் உணவு பரிமாறப்படுவதை மேற்பார்வை செய்துவந்தேன் என அவர் தன் மனுவில் கூறியுள்ளார்.

loading...