Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரரை போற்று படத்தை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் அருவா! கதை இதுதானாம்

சூர்யாவின் நடிப்பில் வரும் ஏப்ரல் மாதம் சூரரை போற்று படம் வெளியாகவுள்ளது. இறுதி சுற்று படத்தில் சுதா கே பிரசாத் இயக்கியுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அபர்ணா முரளி நடித்துள்ளார்.

அண்மையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது. ஏற்கனவே டீசர், டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் அண்மையில் வெளியானது.

இப்படத்தை ஹரி இயக்கப்போகிறார். அருவா என படத்திற்கு பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது படம் சூர்யாவின் முந்தய படம் வேல் படத்தை ஒத்து இருக்கும் எனவும், அண்ணன் தம்பி கதை எனவும், குடும்ப படமாகவும் அமைக்கப்படுகிறதாம்.

படத்தின் முக்கிய காட்சிகள் தமிழ்நாட்டில் எடுக்கப்படுவதோ அடுத்த மாதம் ஷூட்டிங் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.