Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை வரலட்சுமியின் அடுத்த மிரட்டல்! லட்சம் பார்வைகளை கடந்த டிரைலர்

நடிகை வரலட்சுமி சினிமா மட்டுமல்லாம சேவ் சக்தி என்ற அமைப்பின் மூலம் பெண்களுக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். செல்லப்பிராணிகள் மீதும் அன்பு காட்டி வருகிறார்.

படங்களில் தன் திறமையை பயன்படுத்துவதற்கான சரியான வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.

சர்க்கார் படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். பின் மாரி 2, நீயா 2 என நடித்திருந்த அவர் வெல்வெட் நகரம், ராஜ பார்வை, காட்டேரி, பாம்பன், டேனி, சேசிங் என பல படங்களில் கையில் என படங்களை வைத்துள்ளார்.

நேற்று அவரின் ராஜ பார்வை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இது ஒரு நாளிலேயே 1.77 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. வரலட்சுமி அடிதடி அட்டகாசம் என இந்த படத்தில் மிரட்டியுள்ளார்.