குக்கூ, ஜோக்கர் படங்களின் மூலம் மனதை ஈர்த்த இயக்குனர் ராஜூ முருகன். ஜோக்கர் படம் சில சர்ச்சைகளுக்கு நடுவில் தாமதமாக வெளியானாலும் அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.
இதனையடுத்து அவரின் இயக்கத்தில் ஜிப்சி படம் அண்மையில் வெளியானது. ஜீவா, நடாஷா நடிப்பில் வெளியான இப்படம் மத அரசியலை கடுமையாக எதிர்த்துள்ளது. குறிப்பாக உத்திர பிரதேச அரசை விமர்சித்துள்ளது.
ஏற்கனவே இப்படம் இருமுறை தணிக்கைக்கு சென்று வந்தது. பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.இலங்கையில் இப்படத்தை முழுமையாக பார்த்ததாக சிலர் கருத்தும் பதிவிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் நீக்கப்பட்ட காட்சிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இதில் 4 வது காட்சி வெளியாகியுள்ளது.