Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடன இயக்குனர் பிருந்தாவை தொடர்ந்து இயக்குனர் அவதாரம் எடுக்கும் அஜித் பட நடிகை.. யார் தெரியுமா ?

நடிகை கனிகா பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் நடிகர் அஜித்துடன் வரலாறு மற்றும் அட்டோகிராப் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இதனை தொடர்ந்து மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வந்த நடிகை கனிகா, அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

மேலும், முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த பொழுதே ஷாம் ராதாக்கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு சாய் ரிஷி எனும் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வரும் கனிகா, தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளதை குறித்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதில் “முதல்முறையாக கேமராவிற்கு பின்னால் நிற்கிறேன், சினிமா கடல் போன்றது அதில் கற்றுகொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது. மேலும், நான் முதல்முறையாக ஒரு குறும் படத்தை இயக்கியுள்ளேன். இது என் மனதிற்கு மிகவும் நேருக்கமான குறும் படம்” என பதிவிட்டுள்ளார்.