Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே படத்தில் இணையும் இரண்டு ஹீரோயின்கள்! யார் அந்த ஹீரோ தெரியுமா

நடிகை லட்சுமி மேனன் சுந்தர பாண்டியன் கும்கி படங்களின் மூலம் நம் மனங்களை ஈர்த்தவர். பின் குட்டி புலி, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன் படங்கள் நடித்து வந்தார். பின் வேதாளம், மிருதன், ரெக்க படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு ஹீரோயினுக்கான முக்கியத்துவத்தை படங்கள் கொடுக்கவில்லை.

அதே போல வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் ஸ்ரீ திவ்யா. பின் வெள்ளக்கார துரை, ஈட்டி, மருது படங்களில் நடித்திருந்தார். சில படங்களில் இரண்டாவது ஹீரோயினாகவும் நடித்திருந்தார். இவருக்கான மார்கெட் மீதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதுபோல அமையவில்லை.

இந்நிலையில் லெட்சுமி மேனன், ஸ்ரீ திவ்யா இருவரும் இணைந்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்கிறார்.

தாய் சரவணன் நல்லுசாமி இப்படத்தை தயாரிக்கிறார்.