Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிக தாழ்மையுடன் வேண்டுகோள் வைத்த மாஸ்டர் பட பிரபலம்! வீடியோ இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தற்போது நாட்டு நடப்பு என்ன என்பது அனைவருக்கும் தெரியும் தானே.

கொரோனா வைரஸை விரட்ட அனைவரும் போராட வேண்டியுள்ளது. மத்திய அரசு நாளை இந்திய முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே வேளையில் மார்ச் 31 வரை தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.

மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ல் வெளியாகும் என முன்பே திட்டமிடப்பட்டதே. ஆனால் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் படம் தள்ளிப்போக வாய்ப்புகள் உள்ளன.

மாஸ்டர் படத்தில் நடிகர் சாந்தனுவும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம், தைரியமாக எதிர்கொள்வோம், இதை விட கொடிய வைரஸை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றுவிட்டோம், பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் இருங்கள் என கூறியுள்ளார்.