Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்ட விருது விழா நிறுத்தப்பட்டது! காரணம் இதுதான்

சினிமா கலைஞர்களுக்கு உற்சாகம் அளிப்பதே விருது விழாக்கள் தான். இவ்விருதுகள் அவர்களின் திறமைக்கும், உழைப்புக்குமான பரிசு எனலாம். சர்வதேச அளவிலும் சில விருதுகள் கொடுக்கப்படுகின்றன.

அப்படியாக உலகின் பல நாடுகளை சேர்ந்த பிரபல நடிகர்கள், நடிகைகள், திரைக்கலைஞர்கள் ஒவ்வொரு வருடமும் சங்கமிக்கும் நிகழ்வு தான் கேன்ஸ் திரைப்பட விழா.

இவ்விழாவில் 40 ஆயிரத்திற்கும் அதிமானோர் கலந்துகொள்வார்கள்.

பிரான்ஸ் நாட்டில் இவ்விழா வரும் மே மாதம் 12 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை நடைபெற இருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இவ்விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சி ஜூன் அல்லது ஜீலை மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்தியாவிலிருந்து நடிகைகளான ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா ஆகியோர் இதில் வழக்கமாக கலந்துகொள்வதுண்டு.