Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் படக்குழு! கொரோனாவால் நேர்ந்த பரிதாபம்

உலகளவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று மிகுந்த அச்சுறுத்துதலை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு உயிர் மீதான பயத்தையும் இது காட்டியுள்ளது. இதனால் உலகின் அனைத்து நாடுகளிலும் கடுமையாக நடவடிக்கைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம் படம் ஜோர்டான் நாட்டில் படப்பிடிப்பு செய்யப்பட்டு வந்தது. கொரோனாவால் அந்த நாட்டின் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதனால் படக்குழு நாடு திரும்ப முடியாமல் பாலைவனத்தில் சிக்கி தவித்திருக்கிறார்களாம். இந்நிலையில் இயக்குனர் கேரளாவின் பாராளு மன்ற உறுப்பினர் ஆண்டனிக்கு மின்னஞ்சல் செய்து நிலைமையை விளக்கியுள்ளார்.

உடனே அவர் ஜோர்டான் நாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்டு பின் அவர்களுக்கு படப்பிடிப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளையும், அவர்களுக்கு தேவையான உணவு கிடைக்க ஏற்பாடு செய்துகொடுத்துள்ளாராம்.