Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரும் எதிர்பார்த்த பிரபல ஹாலிவுட் நடிகரின் படம் ரிலீஸ்! இனி நீங்களும் பார்க்கலாம் இங்கே

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உலகமே பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. சினிமா பட உலகமும் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

தியேட்டர்கள் மூடப்பட்டன. படப்பிடிப்பு தடை செய்யப்பட்டது. இதனால் ரிலீஸ் ஆக இருந்த படங்கள் நின்று போயின. தற்போதைய சூழ்நிலை மாறி இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கூட ஒரே நேரத்தில் அனைத்து படங்களும் வெளிவருவது என்பது சாத்தியமற்றதே.

இந்நிலையில் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்திய மொழி படங்கள் சில இதில் வெளியிடப்படுகின்றன.

ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் டாம் ஹங்க்ஸ் நடித்துள்ள கிரேஹவுண்ட் என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனாவால் நேரடியாக படத்தை இணையதளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம்.

இரண்டால் உலகப்போரை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.