Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சைக்கு பின் துல்கர் சல்மான் வெளியிட்ட மிரட்டலான போஸ்டர்! படத்தின் கதை இதுதானாம்

ஓ காதல் கண்மணி, வாயை மூடி பேசவும் தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். அண்மையில் அவரின் நடிப்பில் வந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் ஹிட்டானது.

ஜாலியான கதையாகவும், கலக்கலான படமாக அமைந்து நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் இடம் பெற்றது. அதே வேளையில் நடிப்பில் வந்த மலையாள படத்தின் காட்சிகள் அரசியல் சர்ச்சையானது. பின்னர் துல்கர் சல்மானும் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று அவரின் புதிய படமான குரூப் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த பிரபல குற்றவாளி ஒருவர் பற்றிய புனைவுக்கதைதான் இப்படமாம்.

துல்கர் சல்மானுடன் சோபிதா துலிபாலா நடிக்க ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்குகிறாராம்.