Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகை சூழ்ந்த அடுத்த ஆபத்து!அன்றே சூர்யா படத்தின் மூலம் எச்சரிக்கை கொடுத்த இயக்குனர்! பலரையும் பதற வைக்கும் சம்பவம்

உலகமே தற்போது கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றன. சுமார் 4 லட்சம் மரணங்களும் 55 லட்சத்திற்கு அதிகமான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அடுத்தாக விவசாய பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்த செய்தி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சூர்யாவின் காப்பான் படத்திலும் இதுபோல வெட்டுககிளிகள் குறித்த விழிப்புணர்வை இயக்குனர் கே.வி.ஆனந்த் அன்றே ஏற்படுத்திவிட்டார்.

வெட்டுக்கிளிகளால் உருவாகும் ஆபத்தை எப்படி முன் கூட்டியே உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு அவர் தான் மாற்றான் படப்பிடிப்புக்காக லொக்கேசன் தேடும் போது மடகாஸ்கர் சென்றதாகவும் அப்போது திடீரென வெட்டுக்கிளிகள் கூட்டம் சூழ்ந்தாகவும், பாதை தெரியாதளவுக்கு வழியை மறைத்துக்கொண்டதாகவும் உடனே இதுகுறித்த தகவல்களை சேகரித்து காப்பான் படத்தின் கதையை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார்.