Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூக்குத்தி அம்மன் படத்திற்கு பின் மீண்டும் ஒருபடம்! கதை இதுதான் - இயக்குனர் இவர் தான்

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் பக்தி படங்கள் அதிகம் எடுக்கப்பட்டன. பெருமாள், முருகன், அம்மன், சாய் பாபா, சிவன் என பல இந்து கடவுள்களை மையமாக வைத்து படங்கள் வெளியாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

இதுபோன்ற பக்தி படங்கள் அண்மைகாலமாக யாரும் எடுப்பதில்லை. இந்நிலையில் தொட்ரா படத்தின் இயக்குனர் மதுராஜ் முருக கடவுளை மையமாக வைத்து படம் இயக்கப்போகிறாராம்.

1 லட்சம் முருக பக்தர்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்களாம். அறுபடை முருக தலங்களிலும் இதன் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளதாம்.

பக்தியும் திகிலும் கலந்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.