Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் படத்தில் பிகில் பட பிரபலம்! மேலும் ஒரு சூப்பரான விருந்து ரசிகர்களுக்காக

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. தனுஷும் கைகளில் பல படங்களை வைத்திருக்கிறார்.

இளம் இயக்குனர் கார்த்திக் நரேனுடன் அவர் அடுத்த படத்தில் கூட்டணி சேரவுள்ளது நாம் அறிந்ததே. படத்தின் டைட்டிலை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் தனுஷ் இரண்டு பாடல்களை எழுதியுள்ளாராம். அவர் முந்தைய படங்களில் எழுதிய மற்றும் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதை மறக்க முடியாது.

அதே வேளையில் பாடலாசிரியர் விவேக் ஒரு பாடலையும் எழுதியுள்ளாராம். மெர்சல், சர்கார், பிகில், பேட்ட, தர்பார், பொன் மகள் வந்தாள் பட பிரபலம் பாடலாசிரியர் விவேக் ஒரு பாடலை எழுதியுள்ளாராம். இன்னும் ஒரு பாடல் எழுத வேண்டியுள்ளதாம்.

ஏற்கனவே ஜிவி.பிரகாஷ் இப்படத்தின் பாடல்கள் பெரியளவில் இருக்கும், தனுஷை பாடல்களில் அதிகம் பார்க்க முடியும் என கூறியிருந்ததையும் நினைவு படுத்துகிறோம்.