Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாறும் சிம்பு! முக்கிய நடிகருடன் கூட்டணி, ஹீரோயின் இவர் தானா?

நடிகர் கமல், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா இணைந்து நடித்து 1978 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அவள் அப்படிதான்.

இப்படத்தை சி.ருத்ரய்யா எனும் இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் இப்படத்தை தற்போது ரீமேக் செய்ய போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆம்., இப்படத்தின் ரீமேக்கில் கமல் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மானும் மற்றும் ரஜினியின் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்புவும் நடிக்கப்போவதாக தெரியவந்துள்ளது.

மேலும் நடிகை ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இப்படத்தை பானா காத்தாடி, செம்ம போத ஆகாதே போன்ற படங்களை இயக்கிய பத்ரீ வெங்கேடேஷ் இயக்கிய போகிறார் என்று கூறுகின்றனர்.