மாஸ்டர் ட்ரைலர் , தளபதி 65 குறித்து மாஸ் தகவல்.. இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..

சினிமா by Karthik

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போய் உள்ளது.

இதன்பின் விஜய் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக 90% உறுதியான தகவல்கள் வெளிவந்திருந்தது.இந்நிலையில் கூடிய விரைவில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் வரவிருக்கிறது.

ஆம் ஜூன் 22, எந்த ஒரு விஜய் ரசிகராலும் மறந்துவிட முடியாத நாள்.அன்று மாஸ்டர் படத்தின் ட்ரைலர் அல்லது தளபதி 65 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரியவந்துள்ளது.

இது கண்டிப்பாக நடந்தால் விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டம் ஜூன் 22 அமையும் என்பது எந்த ஒரு சந்தேகமும் இல்லை.