அட்லீ, மாஸ்டர் அர்ஜூன் தாஸின் அடுத்த படம் ரிலீஸ்! படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கூறிய மாஸ்டர் இயக்குனர்

சினிமா by Raana

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் தீபாவளி ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் டிரைலர் விஜய்யின் பிறந்த நாள் ஸ்பெஷலாக ஜூன் 22 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் அட்லீ. அவரின் தயாரிப்பில் அடுத்ததாக அந்தகாரம் படம் உருவாகியுள்ளதாம்.

மாஸ்டர் படத்தில் நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ், வினோத் கிருஷ்ணன், பூஜா ராமச்சந்திரன், மிஷா கோஷல் ஆகியோர் நடிக்க படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாம்.

விக்னராஜன் என்பவர் இயக்கியுள்ள இப்படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை பார்த்த மாஸ்டர் பட இயக்குனர் அட்லி இதுபோன்ற படம் ஒன்றை சமீபத்தில் பார்க்கவில்லை. விக்னராஜனின் எழுத்துக்கு நான் ரசிகன். அர்ஜூஸ் தாஸ், வினோத் கிருஷ்ணன் அருமையாக நடித்துள்ளார்கள். அட்லி கையில் வெற்றி படம் ஒன்று உள்ளது என கூறியுள்ளார்.