Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த பிளான்! துரிதமாகும் இயக்குனர்!

தமிழ் திரையுலகின் தனித்திறமையான இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு பொன்னியின் செல்வன் காவியக்கதையை படமாக இயக்குவதே. இதற்காக அவர் கடும் முயற்சியெடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் தாய்லாந்து நாட்டில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை தொடங்கினார்.


இதில் கார்த்தி, விக்ரம், மோகன் பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பலரும் இணைந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவ தொடங்கியதில் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.


இந்நோய் தொற்றால் வெளிநாடுகளில் படப்பிடிப்புகள் தொடர தற்போது ஏற்ற சூழல் இல்லை என்பதால் இந்தியாவின் மகாராஷ்ட்ராவின் சில பகுதிகள் தற்போது கொரோனா கட்டுக்குள் வருவதால் வரும் செப்டம்பர் மாதம் புனேவில் படப்பிடிப்பை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளாராம்.


விரைவில் கொரோனா தனிந்து நிலைமை சீரானதும் அரசு அனுமதியுடன் படப்பிடிப்புகள் தொடங்கலாம் என படக்குழுவும் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.


பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் அடுத்தவருடம் வெளியாகும் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ரஹ்மான் இசை என்பது படத்தின் மீது அனைவருக்கும் கூடுதலான எதிர்பார்ப்பு உள்ளது.