Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷூட்டிங் கேரவனுக்குள் நடக்கும் தகாத செயல் - கூட்டத்துடன் எச்சரிக்கை! உண்மையை கூறிய பிரபலம்

கடந்த சில நாட்களாக நாடு முழுக்க சினிமா வட்டாரத்தில் போதை பொருள் கடத்தல், பயன்பாடு இருப்பதாக சொல்லப்பட்ட புகாரை அடுத்து நடிகைகள், நடிகர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.

கர்நாடகாவில் கன்னட சினிமாவை சேர்ந்த நடிகை சஞ்சனா, ராகினி திரிவேதி போன்றோர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்க தற்போது மலையாள சினிமாவிலும் போதை பொருள் பயன்பாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பட தயாரிப்பாளரும் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பாவுமான சுரேஷ் குமார் கூறியதாவது, மலையாள சினிமாவிலும் போதை பொருள் புழக்கம் இருக்கிறது. படப்பிடிப்பில் சில தயாரிப்பு பணியாளர்களே எங்களிடம் வந்து சார், கேரவனுக்குள்ளேயே போக முடில, அவ்வளவு வாடை அடிக்கிறது. என அடிக்கடி கூறுவார்கள். ஆனால் இவர்கள் தான் என குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.

கர்நாடகா போல இங்கும் பார்ட்டி கலாச்சாரம் இருக்கிறது. ஆனால் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது எச்சரிக்கை கொடுத்த பின் புகார் ஏதும் எங்களிடம் வருவதில்லை. ஆனாலும் இன்னும் போதை பொருள் புழக்கம் இருக்கிறது என கூறியுள்ளார்.