பல வருஷங்களுக்கு பின் சிம்பு செய்யும் விஷயம்! STR ஃபேன்ஸ் எங்க இருக்கீங்க!

சினிமா by Raana
Topics : #Simbu

சிம்புவுக்காக குரல் கொடுக்க தமிழ்நாட்டில் ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருப்பது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் மாநாடு படத்தை அவர் நடித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் விரைவில் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுசீந்திரன் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமத்தை அடிப்படையாக கொண்ட இக்கதை சிம்புவுக்கு பிடித்துவிட்டதாகவும், மாநாடு படத்திற்கு பின் படப்பிடிப்புகளில் இணையவுள்ளாராம்.

கடந்த 2004 ல் இயக்குனர் ஹரி எடுத்த கோவில் படத்தில் கிராமத்து கதையில் சிம்பு நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.