Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை மரணம்! 100 க்கும் அதிகமான படங்களில் நடித்தவருக்கு நேர்ந்த சோகம்

சினிமாவில் அண்மைகாலமாக மரண செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவால் பலரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படியான செய்திகள் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தாலும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

இப்படியாக Aai Kalubai என்ற மராத்தி சீரியலில் நடிப்பதற்காக சதாரா சென்ற நடிகை Ashalata Wabgaonkar க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.

அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 22 பேருக்கும் கொரோனா தொற்று பாசிட்டிவ் என வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ashalata பாலிவுட் சினிமாவில் 100 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தன் மகனுடன் வசித்து வந்த அவருக்கு இறுதி சடங்குகள் சதாராவில் நடைபெறவுள்ளது. அவருக்கு வயது 79.