Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷின் அண்ணாத்த படம் என்னாச்சு! மாஸான பிளான் இதோ

சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா ஆகியோர் இணைந்த அண்ணாத்த படம் கடந்த 2019 டிசம்பரில் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன.

2020 ஏப்ரலில் படப்பிடிப்புகளை முடித்து விட வேண்டும் என திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸான அசாதாரண சூழல் நிலவியதில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

கொரோனா முழுமையாக நீங்கின பின் படப்பிடிப்புகள் நடத்திக்கொள்ளலாம் என ரஜினியும் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் படப்பிடிப்புகளை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

ரஜினி அல்லாத காட்சிகளை முதலில் முடித்துவிட தயாராகிறார்களாம். அதெல்லாம் முடிந்த பின் சற்று ஓய்வெடுத்து அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ரஜினியின் காட்சிகளை எடுக்கவுள்ளார்களாம்.