Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் தற்கொலை செய்துகொள்வேன்! இமேஜை இழந்த இயக்குனரின் வேதனை! தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்

தமிழ் திரையுலகில் படம் எடுத்து வெளியிடப்பட்டு வெற்றி காண்பது என்பது பெரும் சவாலாக தான் இருக்கிறது. அதுவரை தயாரிப்பாளர்களுக்கு நிம்மதியான தூக்கம் வருமா என்பதே கேள்விக்குறியே.

இதற்கிடையில் சில சம்பவங்களை படமாக எடுக்கும் பொழுது போது இயக்குனர்களுக்கு பெரும் போராட்டமாக தான் இருக்கிறது.

அவ்வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஐடி ஊழியர் பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம்.

இதை மையமாக வைத்து நுங்கம்பாக்கம் என்ற படத்தை இயக்கியுள்ளார் ரமேஷ் செல்வன். இவர் விஜயகாந்தின் உளவுத்துறை படத்தை இயக்கியவர்.

இரண்டு ஆண்டுகளாக சட்டம், சமூகம், தனிமனிதன் என பல போராட்டம். மேட்டர் படத்தை எடுத்தால் போலிஸ், வக்கீல், ஜாதி தலைவர்கள் முன்பும் இமேஜ் இழந்து நின்றேன்.

கமிஷ்னர் என பலரையும் சந்தித்து அனுமதி வாங்கிய பின்னரே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சென்சாருக்கு சென்றால் பெயர், டைட்டில் பிரச்சனை செய்தார்கள். இதற்கிடையில் என்ன கொலை செய்தவன் போல நடத்தினார்கள். என் அலுவலகத்தில் 24 பேரிடம் விசாரித்தார்கள்.

கொரோனாவால் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை வேறு. இவ்வளவு சூழ்நிலைகளுக்கு நடுவே இப்படத்தை பைரசி எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் தற்கொலை செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.