Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தியேட்டர்கள் தீர்ப்பு.. தீபாவளிக்கு ரிலீசாகும் 3 திரைப்படங்கள்

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு தியேட்டரும் திறக்கப்படவில்லை. இதனால் பல நஷ்டங்களை திரையரங்கத்தின் உரிமையாளர்கள் சந்தித்துள்ளார்கள்.

இந்நிலையில் அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அக்டோபர் 22ம் தேதி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தியேட்டர்கள் திறக்கப்பட்டால் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருப்பதால், முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிதாக 3 படங்களை ரிலீஸ் செய்ய போவதாக கூறப்படுகிறது. இதனால் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர். மகன்’ - அருள்நிதி, ஜீவா கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘களத்தில் சந்திப்போம்’, - சந்தோஷ் பி ஜெயக்குமாரின் ‘இரண்டாம் குத்து’ஆகிய 3 படங்கள் தீபாவளிக்கு வெளியாக அதிக வாய்ப்புகள் என கூறப்படுகிறது..