தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதலில் ரிலீஸ் ஆகும் படம் இது தானாம்! பிரம்மாண்ட வசூல் கலெக்ஷன்!
கொரோனா இந்த 2020 ம் ஆண்டின் முக்கால் சதவீத வருடத்தை முழுங்கிவிட்டது என்றே சொல்லலாம். ஊரடங்கு, சமூக விலகல் என கடும் கட்டுப்பாடுகளை கடந்து நாம் கடந்த இரு மாதங்களாக தான் தளர்வுகளில் இருக்கிறோம். இருந்தாலும் இயல்பு நிலை எப்போது என மக்கள் ஏங்கியிருக்கிறார்கள்.
தளர்வுகள் படிப்படியாக அறிவித்து வந்த நம் நாட்டு அரசு சினிமா தொழில் விசயத்தில் தியேட்டர்களை நவம்பர் 1 முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கலாம் என அறிவித்தது.
ஆனால் வெளிநாடுகளில் இன்னும் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் தியேட்டர் திறப்பது என்பது தற்போது சாதகமற்றதாகவே இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஜப்பானில் தியேட்டர் திறக்கப்பட்டதும் உலகம் முழுதும் பிரம்மாண்ட வசூல் செய்த பாகுபலி படத்தின் 2 ம் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.