Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - 3 முன்னணி பிரபலங்களை தலைவர் பதவிக்கு போட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிய தேர்தல் அடுத்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

அதில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி ராம.நாராயணன் மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் முன்னணி பிரபலங்கள் போட்டியிடுகிறார்கள்.

வேட்பு மனு தாக்கல், கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. அதில் டி.ராஜேந்தர், முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.

வேட்பு மனுவை வாபஸ் பெற வருகிற 29ஆம் தேதி கடைசி நாள். ஓட்டுப்பதிவு நவம்பர் 22ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.