விஜய்யின் படங்களில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. அதே வேளையில் ஃபேமிலி செண்டிமெண்ட்களுக்கும் குறைவிருக்காது. அப்படியாக அண்ணன் தங்கை பாச உறவாக பலரையும் கவர்ந்த படம் வேலாயுதம்.
மோகன் ராஜா இயக்கத்தில் சரண்யா, ஹன்சிகா, ஜெனிலியா என பலர் நடிக்க இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பாடல்களும் ஹிட் ரகம் தான்.
காமெடி சீன்களுக்கு நடுவே பாம் வெடிப்பதும் அதில் தங்கையை பறி கொடுப்படுதும் விஜய் அநியாயம் செய்யும் ரவுடிகளை பழி வாங்குவதும் என திரைக்கதை செல்லும்.
இப்படம் வெளியாகி 9 ம் ஆண்டை எட்டிவிட்டது. இதனை இயக்குனர் மோகன் ராஜா, நடிகை ஜெனிலியா ஆகியோர் #9YearsOfVelayudham என கொண்டாடி வருகிறார்கள்.
Extremely special film... So fortunate to be part of this film with @actorvijay and see his immense stardom and receive all the love from his well wishers.. Thank You @jayam_mohanraja for making me part of it #9YearsOfVelayudham https://t.co/CJEvCGtUrw
— Genelia Deshmukh (@geneliad) October 26, 2020