Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அண்ணாத்த படக்குழு எடுத்த முடிவு! என்ன நடக்கிறது இப்போது?

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் இணைந்தார். குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு வந்த நேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு அனைவரும் வீடு திரும்பினர்.

ரஜினிகாந்தும் வீட்டில் இருந்த படியே ஓய்வெடுத்து வந்தார். பண்ணை வீட்டிற்கும் சென்று வந்தார். அண்மையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் படக்குழு ரஜினி அல்லாத மற்ற காட்சிகளின் பணிகளை தொடங்கியது. ரஜினி நடிக்கும் காட்சிகளை 2021 ஜனவரியில் எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்.