Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியுடன் பேசிய முக்கிய நபர்! அதிரடி பிளான்! காத்திருப்பது இதற்காக தானாம்! நடக்கபோவது என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. அண்மையில் அவர் ரசிகர் மன்ற இயக்க நிர்வாகிகளை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து விவாதித்து பேசினார். அரசியல் வருகை குறித்து கலந்தாலோசித்தார்.

அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகவிட்டது. நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன் என அவர் கூறியுள்ளார். ஏற்கனவே அவர் சொன்னது போல முதலமைச்சராக வேறொரு நபரை தான் நிறுத்துவேன். எனக்கு பதவி ஆசை இல்லை. காசு, பணம், பதவி சம்பாதிக்கும் ஆசையில் யாரும் கட்சியில் இணைய வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் சந்திப்பு முடிந்த பின் ரஜினியின் அண்ணன் சத்ய நாராயண ராவ் ரஜினியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்,

செய்தி சானலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் நானும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உடன் சேர்ந்து தமிழ்நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எனக்கு கூட தெரியாது. அவர் தான்" சொல்ல வேண்டும் ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கொரோனா சூழ்நிலையால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடல் நலம் பேணி வருகிறார். நிச்சயமாக அவரின் பிறந்த நாளுக்கு முன்னரே தன் அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்து விடுவார்.

அவர் என்ன சொல்லப்போகிறார் என்ற குழப்பம் எனக்கும் உள்ளது என சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்