மாஸ்டர் படத்தை வெளியிட்ட பிரபல தியேட்டர் நிறுவனம் மீது புகார்! அபராதம்! வழக்கு பதிவு
மாஸ்டர் திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியானது. ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். விஜய் கல்லூரி பேராசிரியராக இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஸ்டண்ட் சில்வா அமைத்துள்ள சண்டைகாட்சிகள் அனைவராலும் பேசப்படுகிறது. ஏற்கனவே திரையரங்குகளில் ரசிகர்கள் மாஸ்க் அணிவதில்லை, விதிமீறல் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை காசி திரையரங்கில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்துள்ளதாகவும், 50 சதவீதம் இருக்கைகளை தாண்டி அதிகமானோரை அனுமதித்துள்ளதாகவும், வீதிமீறல் நடைபெற்றுள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக காசி திரையரங்கம் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதுடன் 5,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனராம்.