Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

6 வருடமாக காத்திருந்த நபர்! மாஸ்டரில் இதை விசயத்தை கவனித்தீர்களா? புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் தியேட்டர்களில் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர். டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் முன்பதிவு மையங்களில் முந்தியடித்துக்கொண்டு சென்றதை பார்த்தீர்கள் தானே.

விஜய்யுடன் மாளவிகா மோகனன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், சாந்தனு, மகேந்திரன் நிறைய நடிகர்கள் பட்டாளாமே இதில் நடித்திருக்கிறார்கள்.

சில நிமிட காட்சிகளில் வந்த சாந்தனு, அதை விஜய் அண்ணாவுக்காக செய்ததாக மகிழ்ச்சியுடன் ஏற்கனவே பகிர்ந்திருந்தார். இதே போல மகேந்திரனும் இப்படத்தில் நடித்ததை பெருமையாக கருதினார்.

இந்நிலையில் நடிகர் ராகுல் கண்ணன் விஜய்யுடன் திரையில் தானும் பகிர்ந்துகொண்டதை பெரும் வாய்ப்பாக கருதி பதிவிட்டுள்ளார்,.

இது போல ஒரு வாய்ப்பாக 6 வருடம் காத்திருந்தாராம். இதற்காக எல்லோருக்கும் நன்றி சொல்லியிருக்கிறார்.

ரசிகர்களும் அவரை வாழ்த்தியுள்ளனர். வாழ்த்துக்கள் ராகுல்...