Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இலண்டனில் நடைபெற்ற “A Gun & A Ring” பிறீமியர் காட்சி: பிரித்தானிய தமிழர்கள் பெருமிதம்

உலகத்தமிழர்கள் பெருமைகொள்ளும் வகையில் ஈழத்தமிழ் கலைஞர்களிடமிருந்து மாபெரும் படைப்பு வெளியாகியுள்ளது. புலம்பெயர் தமிழர் கனடா மண்ணில் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்கள்.

லெனின் எம் சிவம் இயக்கத்தில் விஷ்ணு முரளி தயாரிப்பில் வெளிவந்த A Gun & A Ring என்ற முழுநீள திரைப்படம் ஈழத்துச்சினிமாவில் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது.

உலகின் பல நகரங்களில் சிறப்புக்காட்சிகளாக காண்பிக்கப்பட்ட இத்திரைப்படம் நேற்று மாலை லண்டன் வெம்பிலி சினி வேர்ல்ட் திரையரங்கில் அரங்கம் நிறைந்த இரு காட்சிகளாக காண்பிக்கப்பட்டது.

இச்சிறப்பு அமர்விற்கு வருகை தந்த இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பங்கு பற்றிய கலைஞர்களை மங்கள இசையுடன் செங்கம்பள வரவேற்பு கொடுத்து அரங்குக்கு அழைத்துவரப்பட்டதுடன் பார்வையாளர்களுக்கு அறிமுகமும் செய்து வைக்கப்பட்டது.

திரைப்பட காட்சிக்குப் பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குனரும் தயாரிப்பாளரும் பதிலளித்தனர். அத்துடன் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் இருந்தன.

இக்காட்சிக்கு வந்திருந்த பெரும்பாலானோர் ஆச்சரியமாக ஒரு விடயத்தையே குறிப்பிட்டார்கள் “நமது சினிமாவும் இனி வீச்சுப்பெறும், நம்மவரான இயக்குனர் லெனின் எம் சிவமிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்….”

ஆம் அந்த நம்பிக்கை வீண்போகாது. திரைப்படக்குழுவுக்கு எமது வாழ்த்துக்கள்.