Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராசியில்லாத நடிகர் சிவகார்த்திகேயன், எத்தனை கஷ்டத்தை கடந்தார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் இன்று தமிழகமே தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர். தமிழ் சினிமாவின் ப்ரின்ஸ் என்று அனைவரும் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

ஆனால், சிவகார்த்திகேயன் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்தது நம் கண்முன் நடந்தவை எல்லாம், அதனால், நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் இவர் ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகர் என்று தான் பலராலும் அழைக்கப்பட்டார், ஆம் சிவகார்த்திகேயன் ஏகன் படத்தில் நடித்து பின் நீக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து தன் நண்பர்கள் மூலம் ஒரு படத்தில் நடித்தார், ஆனால், அந்த படம் பாதியிலேயே நின்றது, அதை நினைத்து சிவகார்த்திகேயன் இன்றும் வருத்தப்படுவார், அப்படத்தில் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோர் நடிக்கவிருந்தனர், இந்த செய்தி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இதையெல்லாம் கடந்து தான் இன்று சிவகார்த்திகேயன் இந்த உயரத்தை அடைந்துள்ளார்.