Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை ஏமாற்றிய தயாரிப்பாளர், சோதனைக்காலம்

அஜித் நடிப்பில் விவேகம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. ஒரு சில வருடங்களுக்கு முன் அஜித் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டும் தொடர்ந்து படங்கள் நடித்துக்கொடுத்தார்.

கிட்டத்தட்ட அது அஜித் நிறுவனம் போல தான், அப்போது அந்த தயாரிப்பாளர் அஜித்தை ஒரு சில விஷயங்களில் ஏமாற்றியுள்ளாராம்.

இச்சம்பவம் அஜித்திற்கு எப்படியோ தெரிந்துவிட்டது, உடனே அவரை அழைத்து இனி நாம் இணைந்து பணியாற்ற வேண்டாம் என கூறி விலகிவிட்டார்.

இதுமட்டுமின்றி ஒரு படத்தை இலவசமாக நடித்துக்கொடுத்துவிட்டு தான் அந்த தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அஜித் விலகியுள்ளார்.

அஜித் அந்த சமயத்தில் மார்க்கெட் இழந்து மிகவும் சோதனைக்காலத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இலவசமாக நடித்துக்கொடுத்த படம் வெளிவந்த பிறகு அஜித்தின் மார்க்கெட்டே வேறு லெவலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.