Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி இயக்குனரை ஏமாற்றினாரா அனிருத்- பழைய கதை தான், ஆனால் இது தெரியுமா?

அனிருத் தற்போது விவேகம், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். இதில் விவேகம் படத்தில் இடம்பெற்ற சர்வைவா பாடல் பல சாதனைகளை படைத்து வருகின்றது.

இந்நிலையில் அனிருத் சில வருடங்களுக்கு முன் வந்த வாயை மூடி பேசவும் படத்தில் இசையமைக்க கமிட் ஆனாராம்.

ஆனால், பணத்தை வாங்கிக்கொண்டு கடைசி வரை பாடல்களே தரவில்லை என இவர் மீது அந்த படக்குழு புகார் எல்லாம் அளித்துள்ளது. அதை தொடர்ந்து தான் ஷான் ரோல்டன் கமிட் ஆகியுள்ளார்.

இதற்காக அனிருத் மன்னிப்பு கூட கேட்டுள்ளார், அதை தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கிய மாரி படத்தில் அனிருத் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.