Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு அடுத்த சாய்ஸ் விஜய், ஷங்கர் முடிவு, ஆனால், விஜய் மறுத்தது ஏன்?

தளபதி விஜய்யுடன் பணியாற்ற பல பிரபலங்கள் வெயிட்டிங். அப்படியிருக்க விஜய்க்கே மிகவும் பேவரட் என்றால் ஷங்கர் தான்.

அவரின் இயக்கத்தில் நண்பன் படம் நடித்தாலும் விஜய்க்கு ஷங்கர் ஸ்டைலில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம்.

பல வருடங்களுக்கு முன்பே இது நிகழ வேண்டியது, ஆம், முதல்வன் படம் முதலில் ரஜினிக்கு தான் வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், அவர் நடிக்க மறுக்க, அதை தொடர்ந்து ஷங்கரின் சாய்ஸ் விஜய்யாக தான் இருந்தது, ஆனால், அந்த நேரத்தில் விஜய் ஒரு சில படங்களில் கமிட் ஆன காரணத்தால் இதில் நடிக்க முடியாமல் போனது.

இதை நினைத்து விஜய் எப்போது வருத்தப்பட்டுள்ளாராம், விரைவில் இந்த கூட்டணி இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமும்.