முதல்வன் படம் யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் இப்படி ஒரு முதல்வர் நமக்கு கிடைக்க மாட்டாரா? என்று அனைவரையும் ஏங்க வைத்த படம்.
இந்நிலையில் இப்படத்தில் அர்ஜுன் இரண்டாம் பாதியில் மனிஷாவை பார்க்க மாறு வேடம் போட்டு வருவார்.
அப்போது பேருந்தில் அர்ஜுன் செல்வது போலவும், டிக்கெட் எடுக்க கூட அவரிடம் பணம் இல்லாமல் இருக்க, நாளைக்கு காசு தருகிறேன் டிக்கெட் கொடுங்கள் என்பாராம்.
அதற்கு பேருந்து நடத்துனர், அவரை கழுத்தை பிடித்து கீழே தள்ளி விட, அவர் அங்கிருந்து ஊர்க்கு நடந்தே வருவாராம்.
இந்த காட்சிகள் எல்லாம் எடிட் செய்யும் போது கட் செய்து விட்டதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.