Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் pride இருக்கட்டும், எங்களுக்கு எப்போது சம்பளம் தருவீர்கள்- வெடிக்கும் பிரச்சனை, பதில் வருமா?

மெர்சல் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றியை பெற்ற படம். இப்படம் பல உலக திரைப்பட விழாக்களுக்கும் சென்று வருகின்றது. தற்போது கூட கொரியன் திரைப்பட விழாவில் மெர்சல் திரையிடப்பட்டது.

இந்நிலையில் மெர்சல் தயாரிப்பாளரான தேனாண்டாள் நிறுவனம் தான் எஸ்.ஜே.சூர்யா நடித்த இறவாக்காலம் படத்தை வெளியிடவுள்ளது. ஆனால், இப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் இன்னும் தரவில்லையாம்.

இதனால், கோபமான பாலாஜி என்ற உதவி இயக்குனர் தன் பேஸ்புக் பக்கத்தில் ‘மெர்சல் pride இருக்கட்டும், அதனால் எங்களுக்கும் சந்தோஷம் தான், ஆனால், எங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை இன்னும் கொடுக்கவில்லை.

எப்போது கொடுப்பீர்கள்?’ என்று பதிவு செய்துள்ளார், இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவி வருகின்றது.