Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜுனியர் என்.டி.ஆர் அப்பாவின் மரணத்திற்கு இந்த ஒரு நொடி தான் காரணம்- வெளிவந்த உண்மை தகவல்கள்

ஜுனியர் என்.டி.ஆர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர். இவரின் தந்தை நந்தமுரி ஹரிகிருஷ்ணா நேற்று கார் விபத்தில் மரணமடைந்தார்.

இவரின் மரணம் தெலுங்கு சினிமாவையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, பல திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹரிகிருஷ்ணா ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பும் போது, அவரே கார் ஓட்டி வந்துள்ளார், அப்போது அவருடன் நண்பர்கள் இரண்டு பேரும் வந்துள்ளனர்.

இதில் ஹரிகிருஷ்ணா மட்டும் சீட் பெல்ட் அணியாமல் வர, தன் நண்பர் ஒருவரிடம் தண்ணீர் கேட்டுள்ளார், ஒரு நொடி திரும்பி தண்ணீர் வாங்குவதற்குள் நிலை தடுமாறி வண்டி தடுப்பு சுவரில் மோதியுள்ளது.

சீட் பெல்ட் அணியாததால் ஹரிகிருஷ்ணா தூக்கி எறியப்பட்டுள்ளார், ஒருவேளை சீட் பெல்ட் அணிந்திருந்தால் கூட அவர் உயிர் பிழைத்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.