Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யா இது, நம்பவே முடியலையே- சூப்பர் ஸ்டாரே சொன்ன தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் மார்க்கெட் உள்ள ஒரே நடிகர். ஏன் ஜப்பானில் கூட இவருக்கு மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்திற்கு எப்போதும் எந்த ஒரு ஈகோவும் ஒரு படத்தை புகழ்வதில் இருந்தது இல்லை.

தனக்கு பிடித்தால் மனம் திறந்து பாராட்டுவார், அப்படித்தான் 15 வருடங்களுக்கு முன்பு சாமி படத்தின் வெள்ளி விழாவில் ரஜினி கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

இதில் விஜய்யும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார், அப்போது ரஜினி ‘அட இந்த பையன் தான் படத்தில் நடிக்கிறானா, நம்பவே முடியவில்லை.

இங்கு நாம் பார்ப்பதற்கும் ஸ்கிரீனில் விஜய்யை பார்ப்பதற்கும் எத்தனை வித்தியாசம், ஒரு மாஸ் ஹீரோ காமெடி செய்வது கடினம்.

ஆனால், வசீகரா படத்தில் விஜய் கலக்கியிருந்தார்’ என ரஜினி மேடையிலேயே மனம் திறந்து பாராட்டினார்.