Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடிக்க தண்ணீர், குழந்தைகளுக்கு மருந்து, சாப்பிட உணவு என எதுவும் இல்லை- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்த பிரபலத்தின் ஆதங்கம்

தமிழ்நாட்டு மக்களை கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது பெரிய பிரச்சனையே கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மோசமான நிலை தான். வீடுகள் நாசம், மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன, மின்சாரம் துண்டிப்பு என இப்படி பல பிரச்சனைகள் உள்ளது.

தன்னுடைய மாவட்டத்தை நேரில் சென்று பார்த்த பாடகர் புஷ்பவனம் குப்புசாமி கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என் மாவட்டம், என் மக்கள், துன்பத்தில் துவண்டுக்கிட்டு இருக்கேன். நான் ஊருக்கு போனா குடிக்கிறதுக்கு நீர் தருகிற தென்னை மரங்கள் ஒன்று கூட இல்லை. சாப்பாட்டுக்கு வழி இல்லை, கஞ்சிகூட குடிக்க வழி இல்லை, என் மக்கள் கஷ்டப்படுவதை தாங்க முடியவில்லை.

நேரடியாக உங்களால் நாகைக்கு போக முடியவில்லை என்றால் எனக்கு தொடர்பு கொண்டு உங்கள் நிவாரண பொருட்களை கொடுங்கள். நான் போய் கொடுத்திட்டு வர்றேன். நான் நாகை மக்களுக்கு மருந்து, உள்ளாடைகள், அத்தியாவசிய பொருட்களை தந்துகொண்டுதான் இருக்கிறேன், ஆனால் அது போதவில்லை.

அங்கே பிள்ளைகளுக்கு சாப்பாடு இல்லை. நாம் கொடுக்கும் அரிசி அவர்களுக்கு பத்தவில்லை. முதியவர்கள், குழந்தைகளுக்கு போர்த்தி கொள்ள போர்வைகள் இல்லை, காய்ச்சலுக்கு மருந்துகள் இல்லை. அதனால் இதுபோன்ற உதவிதான் இப்போது உடனடி தேவையாக இருக்கிறது என பேசியுள்ளார்.