Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரெட் படம் தோல்விக்கு இது தான் காரணம், இயக்குனரே சொன்ன கருத்து

அஜித் நடிப்பில் மிகவும் எதிர்ப்பார்ப்பில் வெளிவந்து தோல்வியடைந்த படம் ரெட். இப்படம் தோல்வி என்றாலும் அஜித்திற்கு மதுரை பக்கத்தில் பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி கொடுத்தது.

இப்படத்தை இயக்கியது வேறு யாருமில்லை, தற்போது காமெடியில் கலக்கி வரும் சிங்கம்புலி தான்.

இவர் அப்போது ராம்சத்யா என்று தன் பெயரை வைத்திருந்தார், இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு யு-டியுப் சேனலுக்கு பேட்டியளித்தார்.

அதில், ‘ரெட் படம் முதலில் ஒரு காதல் படமாக எடுக்க நினைத்தேன், பின் அதில் ஆக்‌ஷனும் வந்தது.

அப்படியிருக்க அதில் ஹியூமர் மட்டும் மிஸ் ஆனது, என்னுடைய பலமே அது தான், அது கொஞ்சம் இருந்திருக்க வேண்டும், அது இல்லாமல் போனது கொஞ்சம் பின்னடைவு’ என்று கூறியுள்ளார்.