Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல்வன் படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது இதனால் தானாம், ஷங்கரே கூறிய தகவல்

ஷங்கர் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க இவர் விஜய்யுடன் இணைந்து நண்பன் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார், ஆனால், அப்படம் ஹிந்தி ரீமேக் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது விருப்பம், இது முதல்வன் படத்திலேயே நடக்க வேண்டியது.

அந்த சமயம் ஷங்கர் ஒருவரை வைத்து விஜய்யிடம் கேட்க முயற்சி செய்ய, அவர் செய்த ஒரு சில விஷயங்களால் தான் ஷங்கரால் அப்போது விஜய்யை இயக்க முடியவில்லையாம்.

பிறகு ஒரு நாள் விஜய்யின் தந்தை அவரை சந்தித்து ‘ஷங்கர் நம்ம நேரடியாக பேசியிருந்தாலே, இந்த படம் நடந்திருக்கும், இடையில் வந்தவரால் செய்ய முடியாமல் போனது’ என்று கூறி வருத்தப்பட்டதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.