Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட ஓடும் திரையரங்கில் நடந்த கொலை, சிகரெட்டிற்காகவா! அதிர்ச்சியடைந்த மக்கள்

பேட்ட தமிழகம் முழுவதும் வெற்றி நடைப்போடுகின்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினி தன் பழைய ஸ்டைலில் நடித்திருப்பது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் திருப்பூரில் ஒரு திரையரங்கில் பேட்ட ஓடும் போது, ரஜினி ரசிகர் பிரபு என்பவர் சிகரெட் பிடித்துக்கொண்டே படம் பார்த்துள்ளார்.

பக்கத்து சீட்டில் இருந்தவர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையாம், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், சிகரெட் பிடிப்பவரை வெளியில் அழைத்து வந்து அடித்துள்ளார்.

அப்போது பிரபுவை நடுமண்டையில் கட்டையால் அவர் தாக்க, இரத்தம் வந்துள்ளது, உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், பிரபு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார், இது எல்லோரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபுவை தாக்கியவர் அதே பகுதியை சார்ந்த திருமூர்த்தி என்பவராம், இவரை போலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.