Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாடு முழுக்க சோகத்தை உண்டாக்கிய பயங்கரவாத தாக்குதல்! வீர வணக்கம் செலுத்திய சினிமா பிரபலங்கள்

இந்தியா முழுக்க மக்கள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள கோர நிகழ்வு புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல். பல ராணுவ வீரர்கள் இந்த சம்பவத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர் இறந்துள்ளனர். இந்தியாவுக்காக உயிர் தியாகம் செய்த அவ்வீரர்களுக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

சமூகவலைதளங்கள் #PulwamaAttack டேக்கின் கீழ் இளம் தலைமுறைகள் பலரும் சோகத்துடன் தங்கள் வீரவணக்கத்தையும் செலுத்து வருகின்றனர். இதில் சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கமல்ஹாசன் இறந்த தமிழ் வீரர்களின் குடும்பங்களை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளாராம்.

போதும்..போதும்.. மன்னிக்க முடியாத காட்டுமிராண்டி செயல் இது எனரஜினி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.