Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாரணம் ஆயிரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்கள் தான், சூப்பர் ஜோடி மிஸ் ஆகிவிட்டதே!

வாரணம் ஆயிரம் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம். இப்படம் ரசிகர்கள் பலருக்கும் தற்போது வரை பேவரட்.

சூர்யாவின் மார்க்கெட்டை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்ற படம், இப்படத்தின் மூலம் தான் சூர்யாவிற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் ரசிகர்கள் பலம் உருவாகியது என்று கூட கூறலாம்.

இந்நிலையில் இப்படத்தை முதலில் சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற பெயரில் சூர்யா-அசினை வைத்து தான் கௌதம் மேனன் எடுத்துள்ளார்.

ஒரு சில காரணங்களால் அந்த படத்திலிருந்து அசின் விலக, பிறகு சமீரா வந்துள்ளார், கஜினிக்கு பிறகு இந்த படத்திலும் இந்த ஜோடி ஹிட் அடித்திருக்கும், ஆனால், மிஸ் ஆகிவிட்டது.

அதை தொடர்ந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு சூர்யா-கௌதம் மேனன் மீண்டும் விரைவில் இணையவுள்ளனர், கௌதமிற்கும் தற்போது ஒரு வெற்றி தேவை, அது இவர்கள் கூட்டணியில் கிடைத்தால் சந்தோஷம், அதுமட்டுமின்றி இன்று மற்றொரு ஸ்பெஷலும் உள்ளது, என்னவென்றால் ஹாப்பி பெர்த்துடே கௌதம்.