Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யுவனை புகழ்ந்து தள்ளி ஷங்கர், அதுவும் இந்த பாடலை கேட்டாம்

யுவன் இன்றைய இளைஞர்கள் பலரின் பேவரட் இசையமைப்பாளர். இவர் இசையில் பாடல்களை விட பின்னணி இசையை ரசிக்க தான் பலரும் படத்திற்கே செல்வார்கள்.

அந்த வகையில் யுவன் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 22 வருடங்கள் ஆகியுள்ளது. அதை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வெங்கட்பிரபு ஒரு பேட்டியில் யுவன் குறித்து பேசியுள்ளார், அதில் ‘நான் பாய்ஸ் பட ஆடிஷனுக்கு சென்றேன்.

அப்போது ஷங்கர் சார், “யுவன் துள்ளுவதோ இளமை படத்தில் கலக்கியுள்ளார், சூப்பரா இசையமைத்துள்ளார்” என்று பாராட்டினார்’ என வெங்கட்பிரபு கூறியுள்ளார்.